பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 0 வள்ளுவம்

இவனேயன்றி, அரசுவினை செய்யும் சிறு பெரு ஊழியர்கள் எல்லாம் ஒராற்றால் சிறு மன்னர்கள் எனத் தக்கவர். ஆதலின், வேந்தனுக்கு - நாட்டுத் தலைவனுக்கு - சொல்லும் இறை மாட்சிகள் சிலவேனும் பிற அரசு வினைஞர்களுக்கும் வேண்டும்.

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (386) கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அலலவை செய்தொழுகும் வேந்து (551)

என்ற குறள்கள் வேந்தன் ஒருவன் மேலவாக நுதலைப் படினும், எளிய காட்சியும், இன் சொல்லும், குடிகளைத் தொந்தரவு உறுத்தாது தழுவும் முறைமையும் ஆகிய வேந்தியல்புகள், அரசுத் துறைப்பட்ட எவ்வினையாளர்க்கும் ஒருவந்தம் இன்றியமையாதன எனக் கொள்க. ஒளி நிரம்பிய ஆட்சித் தலைவனுக்கே இப் பண்புகள் வேண்டும் என்பரேல், ஏனைக் கீழ்நிலைப் பதவியாளர்களுக்கு வேண்டும் என்பது தானே விளங்கும் அன்றோ? ‘குடிமக்களை நன்கு மதிப்பது வினை செய்வார்க்கு ஒழுக்கம்’ என்ற வள்ளுவம் இதனால் வலியுறும். இதுகாறும் அரசியலில் வள்ளுவர் கண்ட பல்வகை ஆள்வார்களைப் பற்றிச் சிற்றளவே உரைத்தேன். இனி இதனை விரித்தற்கு இவ்வொரு சொற்பொழிவு இடங்கொடாது; ஆதலின், இம்மட்டோடு நிறுத்துவல்.

ஒரரசு உள்நாடு வெளிநாடு என இருபெரும் பிரிவுகளாகத் தன் கொள்கைகளை வகுத்துக் கொள்ளும். அவற்றுள் வள்ளுவ அரசின் வெளிநாட்டியலை முதற்கண் ஆராய்வோம். -

முழு இந்தியாவின் விடுதலை நோக்கம் வைத்து, நம் பெறலரும் தலைவர்கள் வினையாற்றினர் எனினும், முடிவில் பாகித்தான் நாட்டுப் பிரிவினைக்கு இசைந்தனர். குடிமக்கள் அனைவரும் ஒன்றுபோல் முன்னேறுதற்கு ஒத்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது நம் இந்திய அரசியற் பாயிரம்; எனினும், பன்னுறாண்டு தாழ்த்தப்பட்ட நம் மக்கட்கும் மலை வாழ்நருக்கும் பத்தாண்டுக் காலம் தனி முதன்மை அளிப்பது என்ற சிறப்பு விதி இருக்கக் காண்கின்றோம். உலகவமைதியையும் போரொழிப்பையும் படைக் குறைவையும் மெய்யாகவே விரும்புவது இந்தியா எனினும்,