பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வள்ளுவம்

பழஞ்சொல் தேடும் முயற்சியும், புதுச்சொல் ஆக்கும் பாடும். பிறவொலி கலவாது மொழி காணும் இடையூறும். குறுகிய நோக்கம் என்னும் பொய்ப் பழியும் உளவாகும். விலங்கீடு குறுக்கீடு இடையூறு இன்ப துன்பமெல்லாம் செயற்பாட்டின்கண் வருவன. நடைமுறை தழுவுக என்பதனால், குறிக்கோள் அழியத் தழுவுக என்பது கருத்தன்று. குறிக்கோள் இல்லாதவன் உயரான்; உலகத்து அப்பொழுது உள்ள நிலை பற்றாதவன் வாழான் கொள்கையும் உலக நடையும் கணிக்கும் அறிவுச் செயலுடையவனே எஞ்ஞான்றும் வீழ்ச்சியின்றி உயர்ந்து செல்வான்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து (596) என்பது ஒரு கொள்கைக் குறள். எண்ணிய உயர்ச்சி வாராவிடினும், உயர்வாக எண்ணுவதை விட்டு விடாதே. என்பர். ஆதலின், குறிக்கோளுணர்ச்சி மழுங்கும்படி, ru உலகியல் பின்பற்றக் கூடாதே யொழிய, நோக்கம் அழியா நடைமுறை தழுவத் தக்கது என அறிக. உலகத்தோடு ஒட்டும் ஒவ்வொரு முறையும் நம் கொள்கை சிறிதாவது செயற்படுகின்றதா? செயற்படா தொழியினும் முரண்பட வில்லையா கொள்கையழுத்தம் தன் ந்ெஞ்சறியக் குறையா திருக்கின்றதா? என்று காண்பது உண்மைக் கோளுடையார் பொறுப்பு. எந்த அளவு நடைமுறையைத் தழுவுவது. எந்த அளவு குறிக்கோளை விட்டுக் கொடுப்பது என்பதெல்லாம் கற்பித்து வருவதில்லை. அறிவுடையார் எல்லாம் உடையார் (430) என்பது முடிந்த வள்ளுவம்.

உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்பது இந் நூற்றாண்டிற் பரவி வரும் அன்புக் குறிக்கோள். பசியும் பிணியும் பகையும் ஒழிக. நாடு தம்முள் அச்சமும் இகலும் நீங்குக, எல்லா மக்களும் கலந்து வாழ்க என்பது நம் வேண்டுகோள். ‘உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்று நினைவு மாட்சி அறைந்த வள்ளுவர் உலகப் பொதுமை. எண்ண அறியாதவரும் அல்லர்: எண்ணாதிருந்தவரும் அல்லர்.

இகலென்ப எல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் (851)