பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வள்ளுவம்

இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என முன்னரே வரையறுத்துவிடுவது இந்நாட் சட்டவியல். குற்றஞ் செய்யத் தூண்டிய நாணளவு பாராது. செய்த குற்றத்தளவு மாத்திரம் பார்ப்பது, இன்று வழக்காடு அவையத்து நடைமுறையாகக் காண்கிறோம். இஃது எவ்வுடம்புத் தலை நோய்க்கும் ஒரே மாத்திரை உடனே எழுதிக் கொடுக்கும் மருத்துவம் போன்றது. வந்த நோய் மீண்டும் வராதபடி மருந்தும் அறிவும் ஊட்டுவதன்றோ மருத்துவப் பயன். இதனை வழக்கு மன்றத்து நடுவர்கள் உணர்தல் வேண்டும். தலைச் செல்லா வண்ணத்தால் ஒறுப்பது என்ற வள்ளுவத்தை உட்கொண்டு, தீமைக்கு அஞ்சும் நாண்துடிப்பு செத்துப் போகாதபடி, மெல்லுணர்ச்சி தடிப்பாகாதபடி தண்டிக்க வேண்டும். ஒரே குற்றஞ் செய்த்ார் பலருள். நாண்மிக்கார்க்குத் தண்டமாக ஒரு சுடுசொல் அல்லது கால்னா போதாதா? குற்றவாளியின் நாணப்பதம் அளந்து தீர்வு கூறும் ஒறுப்புரிமையை நடுவர்கள் பெறுகதில்,

குடிமக்கள் நினைவும் திருக்குறள் அறிவும் உடைய ஒர் அமைச்சர் - நம் அனைவோர் மதிப்பிற்கும் உரியராய் இக்கூட்டத் திற்குத் தவறாது வரும் அவர் - வள்ளுவர் இன்று அமைச்சராய் இருப்பாரேல் முதற்கண் மக்கட்கு எந்நலம் செய்வார்?’ என்று யான் திடுக்கிடும்படி வினவினார். அமைச்சர்கள் புலவர் தொழிலை இன்று மேற்கொண்டு விட்டனர். வினைகெட்டு ஓயாது சொன்மாரி பொழிகின்றனர். இச் சொல்லாரவாரத்தை வள்ளுவப் பெருமகன் விழையார் என்றும், அறிவுக்கிழவன் இராசகோபாலாச்சாரியார் அரசுக் கடன் வெளியீடு ஐந்துகோடி நிரம்பவும், தஞ்சைப் பண்ணையாட் சட்டம் நிறைவேறவும், கைத்தறிக் குடும்பத்தார் தொழில் வறுமை நீங்கவும், சொல்லம்பு வீசினாற்போல, காரியத்தை முன்வைத்து அதற்கு மக்களின் துணை திரட்ட, நம் ஆசிரியர் மாசற்ற சில சொல்வார் என்றும் விடையிறுத்தேன். அமைச்சர்கள் நிற்க. அறங்கூறு அவையத்து நடுவணரும். படைத் தலைமக்களுங்கூட மக்கள் தொடர்பு என்னும் பெயர் மேலிட்டு, இந்நாள் கழகம் பல ஏறிப் பல சொல்லக் காமுற்றுவிட்டனரே. சொற்பூதம் அன்றோ நாட்டைப் பிடித்து நலிவிக்கின்றது என்று வருந்தினேன்.