பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வள்ளுவம்

மக்கள் வாழ்விற் பன்னிலையினர் என்று துணிந்து அறப்பன்மை கரைந்தனர்; அன்னோர் ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ளும் வன்மையாலும் பல திறத்தினர் என்று கண்டு நடைப்பன்மை மேற்கொண்டனர். தன்னிலையுணர்ந்து செய்க: யார்க்கும் முன்னேற்றம் உண்டு என்பது வள்ளுவம். ஆதலின் இந்நோக்கினை மனத்திற் பதித்துக் கற்பார் கற்க கற்பின் ஆசான்தன் நெஞ்சங்கள் புலனாகும். பசி தீர்க்கும் ஆற்றல் சோற்றுட் கிடக்குமாங்கு, நம் மாசு அகற்றும் உறுதி குறளிடைக் கிடப்பது வெளிப்படும். ஒரு நோக்கின்றிக் கற்பின், கற்பவர்தம் நெஞ்சு வலுப்படாது. நெஞ்சு உரம்பெறவும், செயல் ஆற்றவும், வாழ்வு உயரவும் திருக்குறள் நடையறிவு இன்றியமையாதது என்று துணிமின்! -

1. உலகம் இரு கூறுபட்டது. தான் பிற என்பன அக்கூறுகள். ஒருவன் பிறர்பால் ஒழுகுவது எங்ஙன்? என்ற நடப்பு செல்நெறி எனப்படும். மற்றையோர் தன்பால் எவ்வாறு ஒழுகினாலும், அதனை ஏற்றுக்கோடல் எங்ஙன்? என்ற நடப்பு கொள்நெறி எனப்படும். இவ்விரு வகையுள் வாழ்வியல் அடங்குமாதலின், குறள்களை இங்ஙன் வகைப்படுத்திக் கற்றல் தகும். ஒழுக்கநெறி இதுவென நூல் வாயிலாகவோ பிறர் வாயிலாகவோ பெரிதும் கற்க வேண்டுவ தில்லை. ஒருவனுக்குத் தன் எண்ணமே அதனைக் கற்பிக்கும். தன்னை வஞ்சித்தலை, இகழ்தலை, சினத்தலை, ஒறுத்தலை, கொல்லுதலையோ, தன்பால் பொய் கூறலையோ, தன்னுடைமை பறிபோதலையோ எவனும் விரும்பான். இனிய சொல்லுதலையும், அருளுதலையும், இரங்குதலையும், உதவுதலையும், புகழ்தலையுமே விழைவான். இது மனித உள்ளம், இணைய தன்னெண்ணத்தையே - தன்னல விழைவையே - அறத்தின் சுட்டாக வள்ளுவர் கண்டார். உலகம் உன்பால் எவ்வழி நடக்கவேண்டும் என நீ கருதுகிறாய்; அவ்வழி நீயும் உலகத்தோர் மாட்டு நடந்துகொள் என்று தன் நெஞ்சு நிழலை எடுத்துக் காட்டினார். உன்போல் உலகை நினை; அதுவே அறம் எனச் சுருங்கக் கூறினார்.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை - வேண்டும் பிறன்கட் செயல் (316)