பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - வள்ளுவம்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் - (30s) இவ்வனைய குறள்கள் தற்காப்பு நடையில் ஒழுக்கம் சாற்றுவன: பிறர்க்குத் தீங்கு இழையாதே என வாளா தொடுக்காது, இழைப்பின், எறிந்த பந்து திரும்புமாப் போல நீதிதடைவாய் என அச்சுறுத்துவன. தன்னலம் நிலைப்பான் பிறநலம் பேணுக என்ற நடைக் கூற்று அத்துணை உயர்வறம் அன்று எனப் பலர் கருதுதலும் கருதுவர். தன்னலம் இழப்பதாயினும் பிறர்நலம் செய்க என்பதன்றோ அறம் எனத் தகும் என்று தொடை விடையாடுவர். தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (327), ‘& செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (987) என வரூஉம் குறள்களால், தனக்கு உற்ற நோய் பொறுத்துப் பிற உயிர்க்கு உறுகண் செய்யாதே எனத் தவப்பண்பு வேண்டுவர் வள்ளுவர். எனினும், அவர் அனைத்து மக்களையும் முன்னேற்ற வெருவராதபடி பலரைத் தழுவிக் கொள்ளும் நோக்கு உடையவர். ஒரு நாட்டின்கண் கல்லூரிகளும் பல்கலைக் கழகங் களும் சிலவேயாக, எல்லாக் குடிகட்கும் கல்விக்கண் அருளும் தொடக்க உயர்நிலைப் பள்ளிகளே பலவாதல்போல், திருக்குறள கத்தும் முதனிலை யறங்களே மிகுவரவின எனத் தெளிக. இதனால் எந்நிலையினர்க்கும் ஒழுக்க வாழ்வு தூண்டிக் கைதுக்கிவிடும் ஆசான்தன் பரந்த நெஞ்சு புலனாகும்.

3. ஒழுக்கம் இன்றியமையாதது எனத் தாமே உணர்ந்து கடைப்பிடிக்கும் அறிவுத் திண்ணியர் நம்முள் மிகச் சிலரே யாவர். இன்னோர் வழுக்கி விழினும் சில சொல் சொன்ன மாத்திரையானே நாணித் திருந்துவர். நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (1.15). ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் (1.36). அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் (198), பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவினவர் (915) எனவாங்கு. நாணுடை மாந்தர்க்கு அறிவுநடையிற் பேசுவர் வள்ளுவர். அஃகி அகன்ற அறிவு என்னாம் (175), அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர். (977), அவனைக் குலத்தின்கண் ஐயப்படும். (958) என அரிதாகச்