பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 261

இம்மடிமைக்கு மாளிகையாகி முயற்சி வலம் இழப்பாரும், ஐயகோ நம் நாட்டு மக்களுள் சாலப்பலர். வினை செய்தற்கே நாம் பிறந்துளோம் என்ற இன்ப வள்ளுவத்தை மறவன்மின் மறவன்மின் ஒருபோதும் மடியின்றி ஓயாது தொழில் செய்கை நம் உடலுரிமை; வாழ்வறம்; சமூக நலம்; நாட்டுத் தொண்டு. வினைப் பற்று கட்டாயம் வேண்டும். பின் வேண்டாதது யாதோ எனின், அவ்வினைப் பயனிடத்துப் பற்றுக்கூடாது; தான் செய்த வினை நலத்தைத் தானே நுகரல் வேண்டும் என்ற அவாக் கூடாது. தென்னை, பனை, புளிமரம் வைப்பார் எண்ணுமாப்போல், என் அரிய வினைப்பயனை யான் துய்க்கப் பெறேனாயினும், எனக்குப் பிற்பாடு உலகம் துய்த்தருளுக என்று எண்ணும் எதிர்நல வுணர்ச்சி வேண்டும். வினை செய்யாத மடியன் சுற்றப்பாரம்; நாட்டின் உட்பகை; வீட்டுக் கள்வன். வள்ளுவம் என்பது வினையறுப்பு அன்று; அவாவறுப்பு. “அற்றவர் என்பார் (வினையற்றார் என்னாது) அவா வற்றார் என்பது குறள் (365). இந்திய நாடு சிறந்து உய்ய வேண்டும். வேண்டுமேல், ஆள்வினை வள்ளுவத்தை - மடிமையற்ற இறைமையை - இனி நாம் நினைக; நம்மனோரும் நினையச் செய்க.

2. கோயில் வலம் வருகையும், தம் சமய நூற் கல்வியும், தம் அடியவர் ஒம்பலும், நாட்பூசை செய்வதும் ஆகிய இவையே இறைவினைகள்; இவ்வினையாளரே நல்லன்பர் என்றும், பிற செயலெல்லாம் பிறப்புத் தரும் இருள் வினைகள்;பிறரெல்லாம் மருளிகள் என்றும், சமயத்தின் பேரால் பொய்க்காற்றுப் பரப்பி வாழும் தன்னலத்தார் பலரைப் பார்க்கின்றோம். நாட்டின் உயர்வை நினையுந்தொறும், இன்னோர் அழிபோக்கு சீற்றத்தைப் பிறப்பிக்கின்றது. இறைவினை என ஒரு தனித் தொகுதி கோடல் அறப் பிழை. ஆதிபகவனைக் குணத்தவனாக வள்ளுவர் காட்டினாரேயன்றி, ஒரு குறுகிய தனி வினையவனாகக் காட்டவில்லை என்பதைக் குறிக்கொண்மின் உழவன், மருத்துவன், அரசு வினை செய்வான், வண்ணான், மழிப்பான், வணிகன், ஆசான் முதலாம் எனைத் தொழிலாளிகளும் இறையன்பர் என்றற்குத் தடையென்னோ? வீட்டுப்பணி, நாட்டுப்