பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.84 வள்ளுவம்

திருமணம் என்றால், ஒரு விழா என்றால், ஒரிழவு என்றால், ஒரு திங்கட்கு மேல் இரவு பகல் கழிப்பர் நம் நாட்டு மக்கள். இப் புறத் துடிப்பு கல்வித் துடிப்பாக மாறக் கண்டிலம். இன்று காணப் பெற்று வளர்க! வாழ்க! என்று உவக்கின்றோம். பக்கத்துப் பெரியோர்கள் குறள் படிக்கக் கேட்டு, ஈராட்டை மூவாட்டைப் பச்சிளந் தமிழ்க் குழவிகளுங் கூட, மழலை கலந்து திருக்குறட் பகுதிகளை இசைக்கின்றன. கேளிர் நாட்டுக்கும் நம் மொழிக்கும் இஃதோர், நல்லூழ். ஆர்ா வேட்கையால் உந்தப்பட்டுத் திருக்குறளை இவண் வேகத்திற் கற்றாரெல்லாம், வீடு சென்றபின், ஆழ்ந்து அமைந்து என்றும் கற்பாராக. திருக்குறளைக் கற்கும் நன் மக்கள் மறவாது குறிக்கொள்ளத்தக்க முறைகள் நான்கு உள.

1. மூலத் திருக்குறள் முழுமையும் (உரைகட்கு அடிமைப்படாது) கற்றல்.

2. திருவள்ளுவர் நெஞ்சறிந்து கற்றல். 3. கற்பவர்தம் வாழ்நிலையொடும் தம் காலநிலையொடும் பொருந்திக் கற்றல்.

4. கற்றபின் நிற்க வேண்டும் என்ற செயல் முனைப்பொடு கற்றல்.

உலகத்து எனைப் பெரிய பனுவல்களும் வாழ்வின் ஒரு கூறினையே விரித்துரைக்கின்றன. திருக்குறளோ ஒருவர் முழு வாழ்க்கைக்கு இன்றியமையா அனைத்துத் துறைகளையும், வித்து நிலையில் வேண்டுமளவு நிரந்து இனிது விளங்கக் கூறுவது. அறம் பொருள் இன்பங்களும், இல்லற துறவறங்களும், குடி படை பொருள் நாடுகளும், அரசு அமைச்சு தூது ஒற்றுக்களும், பெற்றோர் கணவன் மனைவி குழந்தை சுற்றங்களும், நல்குரவு இரவு மருந்துகளும், பழமை கூடாநட்பு தீநட்புகளும், நிலையாமை மெய்யுணர்வு இறைமைகளும் எனவாங்கு சொல்லப்படும் கூறுகள் அளவில. இனைய கருத்துப் பரப்பை உட்கொண்டன்றே. எல்லாப் பொருளும் இதன்பால் உள என எடுத்துக்காட்டினார் மதுரைத் தமிழ் நாகனார். வாழ்வு வகை இங்ஙன் பல வாதலின், வள்ளுவங் களும் பலவாயின என்று அறிக.