பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் - 283

அடிக்கடி உரம் போடுவதுண்டு; சூடு பிறப்பிப்பது உண்டு; அச்சம் ஊட்டுவது உண்டு. பலர் அறியச் செய்த வள்ளுவப் பொழிவுகளால், உண்மை விளம்பின், யான் என் வாழ்க்கைக்கு ஒழுக்க மெய்வேலி கட்டிக் கொண்டேன். பேரன்பினராய நும் நல்லூழால் நான் பெறப் பெற்ற பயன் இது.

இன்னும் ஒரு மணிப் போழ்தில் இக் கூட்டம் நிறை வெய்தும்; அதன்பின் நாமெல்லாம் தத்தம் ஊருக்குச் செல்வான் பிரிவோம் என்று எண்ணுங்காலைக் கவலுணர்ச்சி முளைக்கின்றது. கூடலும் பிரிதலும் உலகியல்பு என்றால், கூடுங்கால் உவத்தலும் பிரியுங்கால் இரங்கலும் உலகியல்பு இல்லையா? பிறந்த குழந்தையால் பெற்றோர்க்குள் அன்பும் பிணிப்பும் நீளுமாப்போல, திருக்குறளால் நம் உறவு வளர்தலல்லது தளர்தல் இல்லை. ஒத்த வள்ளுவ உணர்ச்சியால் நம் உள்ளங்கள் கிழமை கொண்டு விட்டன. ஆதலின், முகப் பழக்கத்துக்கு வாய்ப்பில்லையே என்று அத்துணை வருந்த வேண்டா.

அறிவுப் பசியாலும், ஆர்வத் துடிப்பாலும், அமைதி யிருப்பாலும் இலங்கையர் போல் வள்ளுவ அவையினர் தமிழகத்தின் பண்பு நிலையைப் பன்மடங்கு உயர்த்தி விட்டனர் என்பது காண யார்க்குத்தான் உவகை பூவாது பல்லாயிர மக்கள் குறளொன்று கையொன்றாய அறிவுக் காட்சியைக் காணும் பேறுடைய எவர் தாம் இறும்பூது எய்தார் திண்ணிய தூய எண்ணம் செயலாகித் தீரும் என்று கண் சான்றாக அறிந்தேன். தமிழர்தம் மறைந்த ஆற்றல், ஆரப்பா மொகஞ்சோதரைப் புதை பொருள் போல வெளிப்படக் கண்டு மனங்குளிர்ந்தேன். குறள் படியாது கொன்னே கழித்த நாட்களைக் குறித்துப் பின்னிரங்கிக் கொண்டிராது, நம்முட்பலர் செய்த அருஞ் செயலைக் கேண்மின்

நாளொன்றுக்கு 133 குறள்கள் - 266 அடிகள் - பொருட் குறிப்போடு கற்பது; 1330 குறள்களையும் பத்து நாளில் ஒரு வெள்ளோட்டம்போல் முடிப்பது என்று ஒர் உயர் சிறு திட்டம் வகுத்துக் கொண்டு, இங்குக் குழுமியுள்ளோருள் பலர். திருக்குறட் பனுவல் முழுதும் சிறக்கணித்த பார்வை செய்திருக்கின்றனர் காண். இக் கன்னி முயற்சி வரவேற்கத் தகுவது; வளர வேண்டுவது. ஒரு