பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மைக் குறிக்கோள் உடையீர்!

நன்றி வணக்கம். வரையறுத்தபடி, இந்நாள் மாலை நிகழ்வது பன்னிரண்டாவது இறுதிப் பொழிவு. வாய்மை நெஞ்சம் என்பது இற்றைப் பொருள். வள்ளுவப் பண்புகளைக் கேட்டற்கென்றே ஈண்டு வந்து, முதல் நாட்போல எல்லா நாளும் விருப்போடு இருந்து, உடன் பிறந்தேனை ஊக்கப்படுத்திய நும் அனைவர்க்கும் தனித்தனி நன்றியுடையேன்; வாழ்த்து வழங்குவேன்.

உலகிற்கு ஒரு நன்மை செய்பவன் அதன் பயனாய்த் தனக்குப் பல நன்மை வரக் காண்கின்றான். பிறநலம் பேணுவது ஒரு ஞான்றும் தன்னலத்தை மாய்ப்பதில்லை; தன் வாழ்வைப் பெருக்குமேயன்றிச் சிறுக்குவதில்லை. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் (399) என்பது தன்னலப் பேறு காட்டும் குறள். நுங்கட்கு வள்ளுவ விளக்கம் செய்வதாகப் போந்து, என் அறிவைப் புதுக்கிக் கொண்டேன். வாழ்க்கை நுண்கூறுகளைக் கேட்பார்க்கு எடுத்துரைக்குமாப்போல, புல்லறி வால் கேளாது கெட்ட என்பேதை நெஞ்சுக்கு இடிப்புரை செய்தேன். செய்க, முயலுக, கற்க, தெளிக, துணிக, ஒழுகுக என்று முன்னிலைப் படுத்துமாப் போலத் தன்னிலைப் படுத்திக்கொண்டேன். காலவறிவும் வினைத் துணிபும் நெஞ்சுரமும் உள்ளத் தூய்மையும் வாய்மை கோரும் இடையறா ஒழுக்கமும் உடையாரே பிறர் உள்ளத்தும் வாழ்வார்; பேதைமையும் மடியும் பொய்யும் பற்றினாரோ தன்னுள்ளத்தும் சாவார் என்ற அறமெல்லாம் புறத்தார்க்குச் சொல்லுமாப் போல, என்னைப் படர்க்கையாக நிறுத்தி என் அகத்துக்குக் கற்பித்தவை. வள்ளுவம் பற்றி உரை தொடுத்த இவன் வினைவேறு சொல் வேறுபட்டான்; முரணிப் பொய்த்து மடிந்தான்; என்னைகொல்?” எனப் பிறர் நகைக்குமாறும் இழிக்குமாறும் நடந்துகொள்ளாதே! முன்னறி வுடையவனாய் ஒழுகு ஒழுகு என்று என் நெஞ்சிற்கு பான்