பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 () வள்ளுவம்

என்கொல்? மக்கட் சாதி பல்வேறு நிலையிற்று. ஒருவனும் பல்வேறு நிலையினன். அஃதாவது மனம் அறிவு பொருள் சூழ்நிலை காலத்துக்குத்தக, வந்த வினைக்குத்தக, பழகும் ஆளுக்குத்தக, நல்ல தீய, இனிய வின்னா, தெளிந்த மயங்கிய, மெல்லிய வலிய பல நிலைகளை வெவ்வேறு அளவுகளில் உடையவன் என்பது. இம்மாறா வியல்பை மனத்துட் பதித்துக் கொண்டு, நிலைப்பன்மைக் கேற்ப அறப்பன்மை கரைந்த செந்நாவினர் வள்ளுவக்குரிசில் என்ற குறள் அடிப்படையை நாம் நன்கு தெளிவோமாக. .

பல நிலையறம் என்ற இத்தலைப்பு புதியதாயினும் ஆழ்ந்து விளங்குவதற்கு உரியதாயினும், வாய்வழி உணவு போலவும் மூக்குவழி உயிர்ப்புப் போலவும் திருக்குறட் கல்விக்கு இன்றி யமையா நேர்வழியாகும். இவ்வழி கற்பினல்லது, வள்ளுவர் நெஞ்சம் காண்டலும் இன்று நாம் சாலப் பயன் உறுதலும் இன்று. பொதுமறை என்னும் கருத்தழுத்தம் படிந்து பலர் திருக்குறளைக் கற்கின்றனர். பொதுமறை பொதுமறை என்றே யாரும் இந்நூலைப் பறை சாற்றுப.

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென. எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி என வள்ளுவர் சமயப் பொதுமை பரப்பப்படுகின்றது. “அதற்கு உரியார் அந்தணரே யாராயின் ஏனை இதற்கு உரியார் அல்லாதார் இல் என அவர் சாதிப் பொதுமை அறையப்படுகின்றது.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநிதி என அவர் அறப்பொதுமை விளம்பப்படுகின்றது. “என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும்” என அவர் காலப்பொதுமை வியக்கப்படுகின்றது. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” என அவர் இடப்பொதுமை கிளக்கப்படு கின்றது. ஆம். இப்பொதுமைப் புகழ்ச்சிக்கு எல்லாம் திருவள்ளுவர் ஆன்ற தகையினர் என்பதனை மறுப்பவரும் உண்டுகொல்! ஒருசாதி, ஒருமதம், ஒருநாடு என்றினைய செயற்கைநிலை கடந்தது