பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளுவம்

ஞாலவளர்ச்சி வேற்றுமைக் கண்ணது. நாம் விரும்பினும் வெறுப்பினும், ஞாலம் வேற்றுமைகளை ஆக்கிக் கொண்டுதான் வருகிறது. வேண்டத்தகும் வேற்றுமைகளோடு, தகா வேற்றுமைகளும் உடன் தோன்றுவது வளர்ச்சியின் இயல்பு. தகாதன ஒழித்தோ குறைத்தோ தகு வேற்றுமைகளைக் காப்பதும் பெருக்குவதும் அறிவுடைமை. ஒரு மரத்து எடுத்த இருவிதைகள் ஒரே காலத்து ஒரேவகை நிலத்துப் பயிரிடப்படினும், அவற்றின் வளர்ச்சியில் வேற்றுமைகளைத் தெற்றெனக் காண்கிறோம். இரண்டு உயிர்களுக்கு வாழ்நிலைகளை எத்துணைதான் ஒன்றாக்கினும், வேற்றுமைக் காட்சி வெளிப்படை. அகம் தீதாயின். பகை யுணர்ச்சிக்குச் சிறு வேற்றுமையும் போதாதா?

வழுத்தினாள் தும்மினே னாக வழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினரீர் என்று (1317)

என ஊடற்குத் தலைவி காரணம் இன்றியும் படைத்துக் கொள்ளுமாப் போல. இகலுடைய நெஞ்சம் வேற்றுமை யின்றியும் படைத்துக் கொள்ளவல்லதன்றோ? மேலும் மக்கள் பல்பூசலெல்லாம் இகல், அழுக்காறு, அவா என்றினைய மன மாசாலும், பேதைமை புல்லறிவு என்றினைய அறிவழுக்காலும் எழுவனவே வன்றி, கேவலம் வேற்றுமை யொன்றானே எழுவன வென்றோ எண்ணு கிறீர்கள் நற்பண்புக்கு வேற்றுமை இடையூறாகாது: ஆகப்படாது. வேற்றுமையெல்லாம் காரணம் என மயங்கும் ஒரு போக்கு ஏற்படின், உடலுறுப்புப் போலும் எனைத்து நல்வேற்றுமையும் இடையூறென் றாகிவிடும். மக்கள் ஆளுக்கொரு உடல் வேற்றுமையும், ஆண் பெண் பால் வேற்றுமையும், குழவி, இளமை, முதிர்வாம் பருவ வேற்றுமையும் கூடப் பகைக்கு உரிப்பொருளாய் விடும். ஆதலின் மனத்துாய்மையும் மக்கள் ஒற்றுமையும் வேற்றுமைக் குறைவை நம்பியிருத்தல் சாலா. வேற்றுமையிடையும் ஒற்றுமை காட்டுவதே நம் கோளாதல் வேண்டும். பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு (995). ‘ஊழி பெயரினும் தாம் பெயரார் (989) என்றபடி, எனைப் புறவேற்றுமைக் கண்ணும் அகத்துய்மை காத்தல் வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மானாசெய் யாமை தலை - (317)