பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளுவம்

என.ஒரறம் வகுப்பர். பொறுத்தற்கு உரியதன்றாயினும் பொறுத்தல் தலையென்ப. பொறுத்தலோடு; கீழறுப்பாரைத் தடுத்தலும் வாழ்வு முறைகாண். ஆதலின் மடப் பொறுமைப்படாது. தகுதியான் வென்றுவிடல் (158) என்றும், அவர் நாண நன்னயஞ் செய்துவிடல் (314) என்றும் வாழ்வு வழி கூறுவர்.

உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்து இயற்கை என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ உணர்த்தியபடி, ஒன்றைப் பெறுஉங் காறும் ஒருவகை மனப்பான்மையும், பெற்றபின் நேர்முரணான மனப்பான்மையும் உலகப் பொதுக்காட்சி. தேர்தல் அமையத்து வாக்குரிமை வீடு வீடாக வந்து இரக்கும் ஒரு பெருமகன் அவைப்பதவி பெற்றபின், தம்மைத் தூக்கி விடுத்த மக்களின் அணிமையை வெறுக்கிறான். இனி ஐந்தாண்டிற்கு ஈசனும் அசைக்க முடியாதென எண்ணத்தடிப்பு உறுகிறான். இந்தியா உரிமை பெறுநாள் வரையும் மக்கட்கு இருந்த ஒற்றுமையும் தன்னல மறுப்பும் பெற்றபின், பெருவேற்றுமையும் பதவி வேட்டையுமாக மாறிவிடக் காண்கின்றோம். பழகாமுன் ஒருவர்.பால் வைத்திருந்த மதிப்பினை, அடிக்கடிப் பழக்கத்தால் மனம் குறைத்து எண்ணுகின்றது. அணித்திருப்பார் அருமை இயல்பிற் புலப்படுவதில்லை. அவர் சொல் எளிதில் செவியேறுவதில்லை. இன்ன இரு வேறு ஆகா மன நிலைகளை உட்கொண்டு.

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் (700)

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர் (699) என நிலையறம் விதிப்பர். இவ்வாறு குறள்தோறும் மனம் வைத்து அறிவோட்டி நின்று ஆராயின், ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு நிலையை யுட்கொண்டு அந்நிலைக்கேற்ற தனியறம் சுட்டுவது என்று தெளியப்படும். நிலையோடு ஒட்டிக் கல்லாது யார்க்கோ சொல்லப்பட்டது என இகழும் பொது மனப்பான்மையில் இன்று