பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 55

கற்று வருகிறோம். இம்முறை தூய குறட்கருத்தை வெளிப் படுத்தாதன் மேலும், செயலுணர்ச்சியை உண்டாக்காது காண்.

‘கற்க கசடறக் கற்பவை - (391)

‘கற்றில னாயினும் கேட்க (414)

‘எனைத்தானும் நல்லவை கேட்க (416)

என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ (397) “கசடற வல்லது உம் ஐயந் தரும் (845)

எனவரூஉம் கல்வி பற்றிய பல குறள்களும் மக்களின் பல்வேறு நிலைகள் நோக்கிப் பிறந்தன என்பது வெளிப்படை வள்ளுவர் பெருமகன் மறந்தோ இகழ்ந்தோ எந்நிலையினரையும் குறளகத்து ஒதுக்கவில்லை. “நி மிகவும் இழிந்துவிட்டனை: இனி உனக்கு முன்னேற்றம் இல்லை; இங்ஙன் கிடந்து மாள்வதுதான் உன் முடிவு” எனத் தள்ளி விடும் சிறுமை வள்ளுவர் உணர்ச்சியில் இல்லை. “நீ பெரிதும் உயர்ந்து விட்டனை: இனிப் பெறவேண்டும் உயர்வு உனக்கு யாதும் இன்று” எனப் புகழ்ந்து அழிக்கும் போக்கும் அவர் மாட்டு இல்லை. இழிந்தார்க்கும் உயர்ந்தார்க்கும் எந்நிலைக் கண்ணும். பின்னும் நல்வாழ்வுண்டு; மேல்வாழ்வு உண்டு என்னும் அழிவில் கொள்கையுடையவர். இவ்வாழ்வுக் கோட்பாட்டினின்றும் அவர் திருக்குறள் பிறழ்ந்ததில்லை எனத் தெளிமின்.

‘ஏவவுஞ் செய்கலான் தான் தேறான்” (848) அஃதாவது சொன் னாலும் அறியான் தன்னாலும் அறியான் என்னும் அறிவிரண்டும் கெட்டான் நிலைக்கே இடித்துரைத்து முன்னேற்றம் காட்டுவரேல், யாபிற நிலைக்குத் திருக்குறளகத்து உயர்வழி யில்லை! “பொறியின்மை யார்க்கும் பழியன்று (618) என உறுப்புக் குறைந் தான் நிலையும், இன்மை ஒருவற்கு இளிவன்று (988) எனப் பொருள் வறியான் நிலையும் உயர்வடைய ஆண்டுப் பேசப்படுதல் வியப்பன்று. ஆதலின், நீரற்ற கடல்போல் அஞ்சத்தகும் ஆழ்ந்த தாழ் நிலை யுடையார்க்கும் நிலையுயர்த்தும் வழிகாட்டி திருக்குறளல்லது பிறிதில்லை. செயற்கரிய செய்வார் பெரியர் (26), உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் (696), கடன் என்ப நல்லவை எல்லாம். (981), குற்றமே காக்க பொருளாக (434), வேண்டாமை யன்ன