பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O வள்ளுவம்

முன்னெல்லாம் பெருமை நோக்கொடு பலர் பார்த்த திருக்குறளைச் செயல் நோக்கில் வைத்து நான் பார்க்கின்றேன். அந்நோக்கொடு கற்குமாறு யாரையும் வேண்டுகின்றேன். திருக்குறள் கண்காட்சிச் சாலையோ எனின், அற்றன்று; நிலத்துட் கிடந்த நாணயம், புழங்கிய மட்பாண்டம், எலும்புக்கூடு, உடல் புதைதாழி, ஒருகால் மறஞ் சான்ற வில் வாள் வேல், அணிசான்ற கலன் என்றினைய பொருள்கள் ஒருங்கு காணப்படும் இடம் ஒரு கண்காட்சிச்சாலை, அச்சாலை காண்பார் வரலாற்றறிவு பெறுவர். பழம்பெருமை அறிவர். அச்சாலைப் பொருள்கள் காண்பார்தம் நாள்வாழ்விற்குப் பயன்படா. ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முந்திய பழம்பெருமை விரித்தற்கும், பண்டையோர் உயர்நிலை அறிவித்தற்கும் எழுந்ததன்று திருக்குறள். நம் திருக்குறட்பற்றை நாமே ஒருகால் தனித்திருந்து நினைந்து பார்ப்பின், நாளைச் சாகவிருக்கும் கிழவனுக்குக் கொடுக்கு மதிப்பளவே திருக்குறளுக்கும் கொடுக் கிறோம் என்பது தோன்றும். பாடஞ்செய்யப்பட்ட உயிர்ப்பொருள் போலத் திருக்குறளை வைத்திருக்கிறோம் என்று தோன்றும்.

திருக்குறள் என் கருத்தில் ஒரு பெருஞ் சந்தை. நடப்புச் சந்தையில் பல இனச் சரக்குகளும், ஒரினத்துள்ளே பலவகைப் பொருள்களும் உள. திருக்குறட் சந்தைக்கண் அதிகாரங்கள் பலவினச் சரக்குக்களாம். ஒரதிகாரத்துக் குறள்கள் ஒரினச் சரக்கின் பல்வகையாம். சந்தையில் உள்ள எல்லாப் பொருள்களும் விற்றற்கு உரியன என்றாலும், அனைத்தினையும் ஒருவரே வாங்கிக் கொள்ளல் இல்லை. கைப்பொருளுக்கேற்ப, நாட்செலவிற்கேற்ப, ஒவ்வொருவரும் வெவ்வேறு தரத்தில் பண்டங்களை வாங்கிக் கொள்கிறோம். நம் உள்ளங் கசிய நாட்டின் கேடு புலப்பட, பழம் என்ற பெயரோடு அழுகி ஒதுக்கியவற்றையும், காய்கறி என்ற பெயரினவாய்த் தோல் திரைந்து நீர் சுருங்கியவற்றையும், மளிகை என்னும் பெயரால் கல்லும் மண்ணும் குப்பையொடு கலந்த வற்றையும், மக்கள் என்பார், என் செய்வது, தம் வறுமைநிலை காரணமாய்க் காசு கொடுத்து வாங்கக் காண்கின்றோம். விற்றற்கு வந்த சந்தைப் பொருள்களை ஒருவர் அல்லர் பற்பலர் பலப்பல