பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை

91


துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண்டாயினும் இல் (1005) என்பது குறள் முடிபு. துய்த்தும் கொடுத்தும் ஆள்பவன் யாவனோ, அவனே யார் செல்வத்திற்கும் உடையோன் ஆவன். ஆட்சிப்படுத்தாதவன் செல்வம் ஆளுதற்கு உரியவர் யார் என அறியப்படாமையின், பொதுவுடைமை எனத்தகும்.

எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தனதாயின்
தானும்அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.

என்னும் நாலடிப் பொருட்பால் அரியதோர் கருத்தினை வழங்கும். அறிவிலான் பெருஞ்செல்வம் யார்க்கு உடைமையாகுமோ என்ற கருத்தால் ஈட்டிய ஒண் பொருள் கொள்வார் பிறர் (1009) என ஈட்டிய தேட்டாளனுக்கு உறவின்மை காட்டுவர் வள்ளுவர். பொருளால் எல்லாம் ஆம் என்று இருப்புக் கட்டியானுக்கு ஆமாறும் ஒன்று உண்டு; அதுதான், மாணாப் பிறப்பு என நயம்பட நகுவர்.

ஒரு தொழில் முதல்வோன்பால் வேலை கேட்பதற்கு ஒருவன் சென்றான். வந்தவனைப் பார்த்து, நீ அல்லும் பகலும் அயராது உழைக்கவல்லையோ’ என்று முதல்வன் வினவினான். “ஆம், உண்ணாதும் உறங்காதும் உழைப்பேன்’ என்று விடையிறுக்கவே, தன்னை முதற்கண் பேணிக்கொள்ள அறியான் தொழிலுக்குத் தகுதியில்லை என்று தொழில் ஈய மறுத்தனன் என்பது ஒரு வழக்கு. வாழ்வுக்குத் தன்னைப் பேணிக்கொள்ளும் தகுதிப்பாடு வேண்டும். ‘குடியாள்வான் நாடாள்வான் என்பது போலத் தற்காக்க அறிந்தவனே பிறரைக் காக்க அறிவான். தற்காவா இகழ்ச்சியை யாதொன்றும் பேணாமையை - பிறநலமாக மதியாது, பேதை தொழில் எனவே திருக்குறள் பழிக்கும். உண்டு வாழ்பவனுக்கு அன்றோ, பிறரை ஊட்டு எனக் காட்டலாம். மனைமுழுதும் நிரம்பிய உண்பொருள் இருந்தும், குறைந்தழியுமே என்று கவன்று. தான் எடுத்து உண்ண மறுப்பவனைக் கொடுத்து உண் என்று எங்ஙனம் கழறுவது தன் வயிற்றை வஞ்சிக்கும் இவன் உலகிடைச் செய்யக் கிடப்பதோர் கடமையில்லை என்ற சினத்தால், -