பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வள்ளுவம்

வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் (1001)

என்பர். இக்கருத்தான் அன்றோ, கொடைக்கடனை முன் வைத்துத் துய்ப்புரிமையைப் பின் நிரல்படச் சொல்லும் ஒரு பெரும் தமிழ் மரபினை, இரண்டுங் கெட்ட வாழ்விலி நோக்கி, தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான் (1005) என மாற்றி நிறுத்தவர். துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக்கழியும் மடவோன்’ என இந்நிரல் மாற்றத்தை நாலடி யாரிலும் காண்க.

முறைப்படி ஈட்டியவன் கொடுத்தும் துய்த்தும் பொருட்பயன் கொள்வான். தேடுங்காலத்துத் தன் வாய் வயிற்றைக் கட்டி, முதலினும் ஊதியம் பெருக்கிய வன்கண்ணனுக்குத் தேடிய பின்னும் இவறல் மனப்பான்மை மாறாது. திருக்குறள் கற்கும்போதே ஒழுகும் எண்ணமிலாதார்க்கு, முழுதும் கற்றபின் ஒழுகும் எண்ணம் உண்டாகாது. அதுபோல, பொருள் வருங்காலைச் செலவிடான், வந்தபின்னும் செலவிட நினையான். பூதங்காக்கும் பொருள் என்பது பழமொழி. பூதமோ உள்ள பொருளைத்தான் காத்துக் கிடக்கும். இப்பேதைப் பூதனோ எனின், ஈட்டிக் காக்கும் ஏற்றம் உடையான். அன்பு ஒதுக்கி அறம் ஒதுக்கித் தன் வயிறு ஒதுக்கி, முறைகோடி ஈட்டிய பேதை துய்த்தற்கு உரியனல்லன் என்ற விதியால்,

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர் (1009)

என்பர். தம் மக்கட்கென வைக்கும் இப்பேதையின் பெருஞ் செல்வத்தை மக்கள் அடையார் சுற்றத்தாரும் அடையார்; அடைவார் யார் யாரோ என்ற சேய்மை காட்டுவான், கொள்வார் பிறர் என்றார். செல்வம் மாசுடையதன்று: அஃது, ஒண் பொருள் எனத்தக்க சிறப்புடையது. இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல் (453) என்றபடி, பேதையால் ஈட்டப்பட்டமையால் நன்றியில் செல்வம் என்னும் இழிபெயர்க்கு உரித்தாயிற்று. நச்சப்படாத வனைச் சேர்ந்தமையால், நச்சுமரப் பழமாயிற்று. ஆகாதவன் கூட்டுறவால், செல்வம் தன் மதிப்பு இழந்தமை கண்டு. ஏதம்