பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 93

பெருஞ்செல்வம் (1006) என்றும், மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று (1007) என்றும் பொருள் மேல் இரக்கங் கொள்வர். பேதையர்பால் விரைந்து புகுந்து நீடித்திருத்தலும், சீருடைச் செல்வர்பால் நாணிவந்து விரைந்து அகலுதலும் செல்வத்து இயற்கையாகக் கண்ட வள்ளுவர் அறமில் பொருள் என்ற கருத்தில், நன்றியில் செல்வம் என இகழ்ந்தார் எனவும். கொள்ளற்கு இடனுண்டு.

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் (437) பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று (438) என்ற குறள்களால், ‘கொடாதும் உண்ணாதும் நாய் பெற்ற தெங்கம்பழம்போல், பொருட்பற்றுக் கொள்வது வாழ்வு இறந்த பெருங்குற்றம் என அறிகின்றோம். உரிமையும் கடமையும் ஒருபடித் தாய்க் கைவிட்ட செல்வப் பேதைநிலை முற்றும் ஒழித்தற்குரியதே யன்றிச் சிறிதும் பற்றற்கு உரியதன்று.

குறள் அறிஞர்களே! பொருட்டயன் பற்றி வள்ளுவர் குறித்த முந்நிலையினரை ஆராய்ந்தோம். இந்நிலை மூன்றனுள் கடமையே நினையும் சிறந்த நிலை மேற்கொள்ளற்கு எட்டா உயர்ச்சியது என்றும், உரிமையே நினையும் நிலை கொள்ளற்கு ஆகா இழிந்தது என்றும், கடமையும் உரிமையும் அற்ற நிலை ஒரு நிலையாக எண்ணத்தக்கது அன்று என்றும் அறிந்து கொண்டோம். இம்மூன்றும் அறமாகச் சொல்வதற்கு ஒவ்வா, வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒட்டா: பின்பற்றற்கு ஆகா என்று ஆய்ந்து ஆய்ந்து தெளிந்த அறப் பெருமகன்,

ஆற்றின் அளவறிந்து ஈக. அதுபொருள் போற்றி வழங்கும் நெறி (4.77) என உலகு ஒட்டும் பொருளொழுக்கம் கரைந்தனர். அளவறி ஈகையே வள்ளுவம் எனத்துணிக வாழநூல் செய்தவர் வள்ளுவ ராதலின், செயற்கு வரும் அறங் கூறுவதே வள்ளுவம் ஆதலின், அனைத்தும் ஈக என்று பொறுப்பின்றிச் சொல்லியொழியாது,