பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.9 பெரியாரின் துணை கூறியும், அமைச்சர் குழுவைக் கடிந்தும் பேசினர் எழுதினர் ஆயினும் அவர்களை அரசாங்கம் கண்டிக்கவும் இல்லை. தண்டிக்க வும் இல்லை. எவ்விதத்திலும் தலையிடவும் இல்லை. அதற்கு மாறாக மற்ற நாடுகளில் தடுக்கப்பட் றிஞர்கட்கும் நாடு கடத்தட் பெற்ற சான்றோர்கட்கும் புகலிடம் அளித்து வந்தது இங்கிலாந்து முஸ்ஸோலினி இத்தாலி ஆட்சியிலும், ஹிட்லரின் ஆட்சியிலும் ஜெர்மனி அறிஞர்களும் அறிவியலறிஞர்களும் சொல்லொணத் துன்பம் அநுபவித் தனர். ஜெர்மனியிலிருந்து நாடுகடத்தப் பெற்ற யூதர்கட்கு அமெரிக்கா புகலிடம் அளித்தது. அங்கு அவர்கள் யுரேனியம் அணுகுண்டு, புளுட்டோனியம் அணுகுண்டு நீரிய அணுகுண்டு கண்டறியக் காரணமாக இருந்தனர். உலகத்தைக் காக்கவல்ல பெருநூல்கள் படைத்த அறிஞர்கள். பலதடைகளுக்கு ஆளாயினர்.அதனால்தான் உலகத்து வல்லரசு மண்ணாய் மறைந்தன: மறைந்தும் வருகின்றன. சில அரசுகளின் கொடுமையான ஆட்சியின் காரணமாக பல்வேறு தீவிரவாதிகளின் இயக்கங்களும் உருவாகி யுள்ளன என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். இவற்றின் செயற் பாடுகள் கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருப்பதையும் காண்கின்றோம். பொது நன்மையை நாடும் சான்றோர்களின் அறிவுச் செயல்கட்குத் தடை ஏற்படுத்துவது பெருங்குற்றம் என்பதை நாம் உணர்ந்து சிந்திக்க வேண்டும் உலகம் உணர வேண்டும். பன்னுறு ஆண்டுகட்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை இந்த உண்மையை உணர்ந்து, அவர்களின் துணை நாடாளும் தலைவனுக்குக் கட்டாயம் வேண்டும் என வற்புறுத்திக் கூறியுள்ளதை நாம் எண்ணி மகிழ வேண்டும். வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான் புகழ் பெற்றது தமிழ்நாடு என்பதையும் சிந்திக்க வேண்டும். வ. வா. சி - 10