பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அவைக்குறிப்பறிதல் t.ళ: - و هو ، هو مج وية به يسو ، ما ? s: : : *、も * * ه هدایا و ماده கூட்டத்தில் பேசுவது மிகவு. ளிேக்க வல்லது. குற்றம் நீங்கச் சொற்களை ஆராயவல்ல அறிஞர்களின் கூட்டத்தில் கற்றறிந்தவர்களின் கல்வி விளக்கம் பெறும் கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து (747) என்பது பொய்யாமொழி. இவ்விடத்தில் - يثيثية محمسة : ماذقية థ్రో புலம்மிக் கவரைப் புலமை தெளிதல் புலம்மிக் கவர்க்கே புலனாம்" என்ற பழமொழியின் பாடற் பகுதி சிந்திக்கத் தக்கது. சொல்வதை நுட்பமாக உணர வல்லவர்களிடம் பேசுவது தானே வளரும் பயிர் உள்ள பாத்தியில் நீர் சொரிவதைப் போன்றது. அதனால் அந்தக் கல்வி மேன்மேலும் வளர்ந்தோங்கும். உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரித் தற்று (7.18) என்பது வள்ளுவர் பெருமானின் வாக்கு. பேரவையிலும் பெருங்கூட்டத்திலும் அஞ்சாமல் பேசுவது ஒரு தனித்திறமையாகும். நம் காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியாரிடம் இப்பண்பைக் கண்டு அடியேன் வியந்ததுண்டு. போர்க்களத்தில் அஞ்சாமல் போர் செய்யும் திறமையை விட, அவைக் களத்தில் அஞ்சாமல் பேசும் திறமை சிறந்தது. பகைவர்களை எதிர்த்துப் போர்க் களத்தில் சாகத் 2. மேலது (பழமொழி)