பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 覚S魂 கொண்டு ஒரு மணி நேரம் விளையாடினேன். 5 டாலர்கள் இழப்பு தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று ஆடுவதை நிறுத்திக் கொண்டேன். ஆடிப்பார்த்து விளக்கம் அடையவே இதில் இறங்கினேனே அன்றி சூதை விரும்பி அல்ல. சகுனியின் பாரதம் சூதாட்டத்தில் அவனது காய்கள் அவன் நினைக்கின்றபடி இயங்கி தரும புத்திரனை ஏமாற்றியது. அந்தக் காய்கள் செய்வதை இங்குப் பொறிகள் செய்கின்றன. டாலர்கள் (10.2050 என்று வைத்து விளையாடுபவர்களும் இருந்தனர். வேறு எத்தனையோ விதமான விளையாட்டுகளும் இருந்தன. அவற்றை யெல்லாம் பார்த்து விவரங்களை அறிந்து கொள்ள நேரம் இல்லை. நாங்கள் நியூயார்க் நகரிலிருந்து சுமார் 100 மைல் தெலைவிலுள்ள இதனைப் பார்க்கச் சென்றவர்கள். திரும்ப வேண்டிய நேரம் வந்ததும் திரும்பி விட்டோம். இந்தப் பெரிய ஆடுகளனைச் சுற்றிலுமுள்ள 100, 200 அடித் தொலைவுகளில் பல சிறிய பெரிய சூதாடு களங்களும் இயங்கிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் முதியோர்களே இவற்றில் பங்கு கொண்டிருந்தனர். நடுத்தர வயதுள்ளவர்களும் இளைஞர்களும் ஓரளவு தான் பங்கு கொண்டிருந்தனர். இவர்கள் தங்குவதற்கும் உணவு கொள்வதற்கும் விடுதிகளும் உள்ளன. கடன் வாங்குவற்கும் நகைகளை வைத்து வசதிகள் இருந்தன. பெரும்பாலும் போண்டி யானவர்களைக் கேள்விப்பட்டோமேயன்றி செல்வச் செழிப் பெய்தினவர்களைக் கேள்விப்படவே இல்லை. இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் என்ற வள்ளுப் பெருமானின் உவமைத் தொடருக்கு நல்ல விளக்கம் கிடைத்தது. ஏப்ரல், மே, ஜூன்-2002 அமெரிக்கா சென்றிருந்த போது இந்த அநுபவம்.