பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選6? ប៊ីត្លែ សណ្ដូង கொள்ளும் வயிற்றையும் பொறுத்தே இந்நிலைகள் ஏற்படு கின்றன. ஒருவர் உடம்பில் இனிப்பு (சருக்கரை மிகுதியாகக் காணப்பெறுவதாக வைத்துக் கொள்வோம். அவர் இனிப்பற்ற உணவைத் தேடி உண்டாலும் சில பொருள்களை (எ-டு அரிசி மரவள்ளி போன்றவை சருக்கரையாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உண்டு. சருக்கரையாக குளுகோசாகி மாறிக் குருதியில் சேர்ந்து உடல் உறுப்புகள் செயற்படும்போது ஆற்றல் தருகின்றது. இப்பொருள் எரிபடாமல் குருதியில் தங்கினால் நீரிழிவு நோய் உண்டாகின்றது. ஆகையால் இனிப்புப் பொருளை மட்டிலும் தவிர்த்தலால் பயன் விளைவது இல்லை. அவ்வாறே புளிப்பு உடம்பில் மிகுந்து விட்டபோது புளிப்பான பொருள்களை விட்டுவிடுவதால் பயன் வினைதல் இல்லை புளிப்பற்ற பொருளைத் தேடி உண்டாலும் அவற்றையெல்லாம் புளிக்க வைத்து புளிப்பாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் வயிற்றில் உண்டாகிறது. மற்றச் சுவைகட்கும் இவ்வாறே காணலாம். சுவைகளை ஒட்டியே வாதம் முதலியனவும் அமைகின்றன என்று இவர்கள் கருதுவார்கள். அந்த முறைப்படி சுவைப்பொருளை மாற்றி மாற்றி உண்பதால் வாதம் முதலியவற்றின் மறுபாட்டால் வந்த நோய் தீர்ந்து விடும் என்பது இவர்தம் நம்பிக்கை. இது தவறு. விலங்குகளும் பறவைகளும் இயற்கையாகவே தம் உடலுக்கு ஏற்ற உணவையும் அதன் அளவையும் தின்கின்றன. அவற்றின் நாக்கு அளவறிந்து தின்னும் கருவியாக அமைந்துள்ளது. மக்களது நாக்கும் தொடக்கத்தில் அந்த ஆற்றல் பெற்றிருந்தது. ஆனால் பகுத்தறிவும் சிந்திக்கும் ஆற்றலும் வளரவளர புலன்களின் இயற்கை ஆற்றல் குன்றிவிட்டது. அன்றியும் சமைத்து உண்ணும் செயற்கை வ. வா. சி - 13