பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix மையும் பெருந்தன்மையும், பாராட்டத்தக்கன. மூதறிஞர் ஆயிரத்தில் ஒருவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். 'திருவள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் புது வரவு. எம் போன்ற எளி யோருக்கு உரிய நூல். பேராசிரியரின் எழுத்தாற்றல் ஆய்வாளர் களுக்கும், திருக்குறள் ஆர்வலர்களுக்கும் பயனை நல்குவ தாகுக. 'புத்தன் என்றால் அமைதி, இயேசு என்றால் அன்பு, 'காந்தி என்றால் எளிமை மற்றும் உண்மை பேரறிஞர் அண்ணா என்றால் கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு முதலிய நிரலுக்கேற்ப, பேராசிரியர் முனைவர் சுப்புரெட்டியார் என்றால் சிந்தனை ஊற்று என இந்நூல் மெய்ப்பிக்கிறது. தமிழ் மக்கள் இந்நூலை வரவேற்பர். என்கெழுதகை நண்பர் பெரியவர், முனைவர் மூதறிஞர் சுப்பு ரெட்டியார் நோயின்றி நூறாண்டுகள், உடல் நலத்துடனும் மனவளத்துடனும் வாழ்ந்து தமிழ்ப்பணியை தொடர வாழ்த்துக்கள். அன்னாருடைய அரிய நூலுக்கு அணிந்துரை வரைய வாய்ப்பை வழங்கிய மூதறிஞருக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்களை நவின்று மகிழ்கிறேன். குறளகம் அறிஞர் அண்ணாநகர் இவண் சென்னை - 40 அன்புடன் 25.3.2004 பாஸ்கரன்.