பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 箕38 கணவனும் மனைவியுமாக இருந்தால் காதல் கிளை செழித்து வளரும் காமக்கிளை செழிக்காமல் போகும் பண்பு இல்லாதவர் களாயின் காமக்கிளையே வளர்நதோங்கும் காதல் கிளை பட்டுப்போகும். காதலர் வாழ்க்கையில் கண்புரியும் திருவிளையாடல் முடியாது. கண்ணே பெரும்பங்கு கொண்டு விளையாடும். தலைவியின் அழகு மட்டும் அவன் பார்வை யையும் நெஞ்சையும் கவரவில்லை. உடல் அழகு மட்டும் கவரும் கவர்ச்சி உயர்ந்த கவர்ச்சி அன்று உள்ளம் கவரும் கவர்ச்சியே சிறப்பைத் தருவது. முதலில் தலைவன் அவளுடைய உடல் வனப்பைக் கண்டு மயங்கினான் என்றாலும், அவளது உள்ளத்துக் கவர்ச்சியையே எதிர்பார்த்து திற்கின்றான். அதையும் பெறுகின்றான். காதலியிடம் இருவித நோக்குகள் உள்ளனவாகக் குறிப்பிடுகின்றார் வள்ளுவர் பெருமான். இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு:ஒன்று அந்நோய் மருந்து (1091)" என்பது வள்ளுவம் ஒரு நோக்கு காதல் நோயைத் தருவதாக அமைகின்றது. அதனை நோய் நோக்கு என்கின்றார். பாம்பு படம் எடுப்பதுபோல் அந்நோக்கால் காதல் நோய் கிளர்ந் தெழுக்கின்றது. அந்நோக்கு மாறி வேறொரு நோக்காக அமைகின்றது. அது முதல் நோக்கு நல்கின நோய்க்கு மருந்தாக அமைந்து விடுகின்றது. படம் எடுத்தாடும் பாம்பு மருந்து வேரைக் காட்டினவுடன் படத்தைக் கீழே போட்டு விடுவது போல கிளர்ந்தெழுந்த காதல் நோய் அடங்கி விடுகின்றது. 1. குறிப்புஅறிதல் 1