பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 箕94 பேரின்பம்: இது தாமரைக்கண்ணான் உலகில் பெறுவது. அந்த உலகம் வைகுந்தம் என்று அருளாளர் பெருமக்களின் கற்பனையால் படைக்கப்பெற்ற உலகம் யாரும் அங்கு சென்று அந்த இன்பத்தைப் பெற்று அவ்வநுபவத்தை இங்குவந்து உரைத்ததில்லை.அது வீட்டுலகம் அங்கிருந்து எவரும் மீண்டும் இந்நிலவு லகத்திற்கு வந்ததில்லை என்பது தத்துவம். உலகப்பற்றை யொழித்து இருவினை அகன்று ஆன்மா அடையும் உலகம் அது. அதுகாலம் நடையாடாத தேசம், பசி, தாகம், முதலியன இல்லை.அங்கு அங்கு இரவு, பகல் என்பது இல்லை. ஆன்மா பரமான்மா அருகில் இருந்து கொண்டு அவன் அழகை அநுபவித்துக் கொண்டு இருப்பது. இந்த இன்பமே பேரின்பம் என்று அருளாளர் பெருமக்கள் நமக்கு உரைப் பது, விளக்குவது. கீழ்க்கூறிய சிற்றின்பம் கூட ஆண் பெண், உடல்களி லுள்ள ஆன்மாக்கள் உடல் உறவால் பெற்று அநுபவிக்கும் இன்டமேயாகும். வள்ளுவர்பெருமான் தலைவன் வாயில் வைத்து இந்தக் கற்பனை உவகைக் காட்டுவார். பரிமேலழகர் குறிப்பிடும் நிரதிசய இன்பம் இது. மக்கள் உடலுறவால் தாம் நேரில் பெறும் இன்பத்துடன் சிற்றின்பத்துடன் அதிசய இன்பத்துடன் வைத்து நோக்கினால் உண்மை புரியும் என்கின்றார். எது இனியது? என்பதும் புலனாகும் என்கின்றார். இந்தக் கற்பனை இன்பமும் தவயோகிகட்கு எட்டலாம். தவயோகிகள் உலகிலுள்ளவர்கள் தாம். அவர்கள் இப்பூத வுடலை விட்டு கற்பனையுலகமாகிய வீட்டுலகத்திற்கு முக்தி யுலகிற்குச் செல்லுவதை யார் கண்டது? அது கற்பனை யநுபவமே. இப்போது எது இனியது என்பதை நம்மால் உணர முடிகின்றது. வேண்டுமானால் வள்ளுவர்பெருமான் தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரியாததை விளக்குகிறார் என்று கொள்ளலாம்.