பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. ஊடலும் கூடலும் கூடல், ஊடல் என்பவை வள்ளுவரின் திருக்குறள் காமத்துப்பாலில் கூறப்பெறும் இரு நிகழ்ச்சிகள். முன்னது புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்திலும் பின்னது புலவி. புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்ற அதிகாரங்களிலும் விளக்கப் பெற்றறுள்ளன. இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால் கலைபற்றிய கருத்துகளை அறிந்து கொண்டால்தான் இயலும், அன்னாசி ரசம், திராட்சை ரசம் மாம்பழ ரசம், ஆப்பிள் ரசம், தக்காளி ரசம் இவற்றை வாங்கிப் பருகும் போது அப்பழங்களை நேரில் கண்ணால் காண்பதில்லை. மனத்தில் நினைத்துக் கொண்டு சுவையை அதுபவிக்கின்றோம். அது போலவே காதல் சுவையை அநுபவிக்கும் போது பெண்ணின் உருவம் கண் காண்பதில்லை. மனத்தில் நினைத்துக் கொண்டு சுவையை மட்டிலும் அநுபவிக் கின்றோம். திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப் பாலில் வரும் காட்சிகளை இப்படித்தான் அநுபவிக்க வேண்டும். அப்படி அநுபவிப்பதற்காகத்தான் அப்பகுதியைப் படைத் துள்ளார் அப்பெருமகன். கூடல் ஊடல் காட்சிகளை இப்படித்தான் அநுபவித்து மகிழ வேண்டும். தீயை நெருங்கினால் சுடும் விலகினால் கூடாது. இது தீயின் இயல்பு. திருவள்ளுவர் காட்டும் தீ அற்புத மானது. அவர் பெண்ணையே தீயாக உருவகிக்கின்றார். அத்தீ அணுகுங்கால் சுடாது தண் என்று இருக்கும். அகன்று போகுங்கால் சுடும்.