பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தோரணவாயில் நவில் தொலும் நூல்நயம் 283)என்னும் அருமைக்கு சிறப்பாகப் பொருந்துகிறது. ஓர் அதிகாரத்தின் பத்துக் குறள்களில் பத்துக் கருத்து மட்டுமே வருவன அல்ல. பல வருகின்றன. கூறிய குறட்பாவில் அவை பலவும் சுரந்து தோற்றிக் கொண்டுள்ளன. ஒவ்வோர் அதிகாரக் கருத்தையும் பத்து வகைகளில் ஆராய்ந்து மன்பதைக்குத் தெளிவை வழங்கியுள்ளார். எல்லோரும் நன்முறையில் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத் துடன் கையாண்டிருக்கும் விரகுகள் நினைந்து நினைந்து. உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து நன்றியுடன் பாராட்டுதற்குரியன. மன்பதைக்கு இன்றியமையாத் தேவையாக இருப் பவை திருக்குறள் கருத்துகள். வையத்துள் வாழ்வாங்கு வாழ (50) வழிகாட்டுபவை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வையத்தில் பிறந்துவிட்ட மாந்தர்களின் கடமை இங்ங்னம் வாழ்தல் என்பது முன்பிறவியின் வினைவு தெளிந்து மறுமையின் ஆக்கத்தைக் காரண காரியத்தில் உணர்ந்து, அல்விருமைக்கும் ஏற்ப, இப்பிறவியில் அறத்தாற்றின் நிலைகுன்றாமல் சான்றாண்மையுடன் வாழ்தலையே உணர்த்து இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை யையே (23) திருக்குறள் விரும்புகின்றது. இருமை என்றது முற்பிறவியையும் பின் மறுபிறவியையும் குறிக்கும்: "ஈண்டு என்றது. இம்மையாகிய நிகழ்காலத்தைக் குறிக்கும். 'அறம்' என்றது அறத்தாற்றை உணர்த்தும். 'அறத்தொடு நிற்றல்தான் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகும். வாழ்க்கை என்பது ஆண்மை பெண்மையின்