பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 4. கூட்டுறவில் தொடங்கி அதன் நடைமுறைக்காகப் புறத்தில் செல்வம் திரட்டல் நிகழ்தலின் புறம் என்பது சிறப்பாகப் பொருளீட்டலையே குறிக்கும். அகம்புறம் என்னும் இவ்விரண்டும் ஆண் பெண் உணர்ச்சியில் நிகழ்வன. ஆயினும் இன்பத்தில் அவ் வுணர்ச்சி அகத்தளவிலும், பொருளில் அவ்வுணர்ச்சி புறநிலையிலும் நிகழ்வதனால், அகப்புறம் என்பன சிறப்பாக அவ்விரண்டை பும் குறிக்க நேர்ந்ததாயினும் அவ்விரண்டும் நிலையாமையாய் இருத்தலின் அவ்விரண்டிலும் அவர்கள் அறத்தோடு நிற்க முற்பட்டனர். அறத்தொடு நிற்றலின், தொடக்கத்தில் ஆண் பெண் உணர்ச்சி நிகழ்ந்தாலும் அதன் இறுதியில் அற்றுப் பொதுவாக உயிர்கள் என்னும் அளவில் அவர்கள் பின்பற்றித் திகழ்வார்கள். அந்நிலையில் கிழவனும் கிழத்தியும் பேரா இயற்கையாகிய 370 வீடுபேற்றினை எய்துவர். இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (374) என்ற வள்ளுவர் பெருமானின் வாக்கின்படி அகம், புறம் இரண்டும் திரு என்றும் அறமும் வீடும் அமையும் நிலையில் ஆண் பெண் இருபாலாரும் பாலுணர்ச்சி நீங்கித் தெள்ளி டிராவர் என்றும் மாற்றம் அடைவதை அறிந்து கொள்ளலாம். இன்பம் என்பது பாலுணர்ச்சியோடு கூடிய அகம் என்றால், அறமும் வீடும் பாலுணர்ச்சி குன்றியும் அற்றும் பின. ஆகவே பாலுணர்ச்சி இன்பம் அகம் எனவும் செல்வம் புறம் எனவும் சொல்லுவதே சிறப்பு !