பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 கடவுள் வாழ்த்து என்பது வள்ளுவம். இறைவனுடைய புகழே உண்மை புகழ் அந்தப் புகழை விழைந்து வழிபடுப மயக்கத்தால் சேரும் நல்வினை, தீவினை என்ற இரு களும் சேராமல் அகன்று ஒழியும். இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5) என்பது வள்ளுவர் பெருமானின் குரல். இறைவன் ஐம்பொறிகளால் வளரும் அவா அற்றவன் அவனது உண்மையான ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுகிறவர்கள் நெருங்காலம் வாழ்வார்கள் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறிநின்றார் நீடுவாழ் வார் (6) என்பது தமிழ்மறை. இறைவன் தனக்கு நிகர் இல்லாமல் சிறந்து வாழ்பவர்களுக்கே மனத்தில் எழும் கவலையை மாற்றுவது இயலும் மற்றவர்களுக்கு அங்ங்ணம் செய்தல் அரிது. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (7) என்பது மன்பதைக்கு அருளப் பெற்ற மாபெரும் செல்வம். இறைவன் அறக்கடலாக உள்ள அருளாளன் அவனுடைய இணையடிகளை எண்ணிப் பொருந்துகிறவர்களுக்கே பொருளும் இன்பமும் ஆகிய வாழ்க்கைக் கடலை நீக்குவது இயலும் மற்றவர்களுக்கு அஃது இயலாது. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது (8) என்பது வான்மறை வள்ளுவம் ஈண்டு எதிர்மறை மரபில் எடுத்துக்காட்டுவது அக்கருத்தை நன்கு வலியுறுத்துவதாய் உள்ளது. வேறுவழி இல்லை என்று புலப்படுத்துவதாயும் உள்ளது.