பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வாழ்க்கைத் துணைநலம் என்பது வான்மறை வள்ளுவம். இல்வாழ்வானுக்குத் துணையாக நிற்பதேயன்றிப் பெண்ணுக்குத் தனிச் சிறப்பும் உண்டு, கற்பு என்னும் உறுதி உண்டாகப் பெற்றால் பெண்ணை விடப் பெருமையுடைய நிலை வேறு இல்லை. பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் (54) என்பது வள்ளுவர் வாக்கு சீதாப்பிராட்டியின் கற்பைப்பற்றி அண்ணல் அநுமன் வாக்கினால் இரண்டு பாடல்களை ஈண்டு நினைவு கூர்ந்து மகிழலாம். விற்பெருந் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பின் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பு தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன் ' என்பதையும், சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த மாகத்தார் தேவி மாரும் வான்சிறப்பு உற்றார் மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன் மகுடத்தாள் பதுமத் தாளும் ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மோலியாளால்" 7. கம்பரா. சுந்தர. திருவடிதொழுத படலம் .ே 8. மேலது - மேலது - 7