பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மலைமேல் வீசி எறிந்துகொல்லுகின்ற மரபு, அவர் களுக்கும் இருந்தது. அதனால், வலிமையான சமுதாயம் ஒன்றை அமைக்கும் வழிமுறைகள் அந்த நாட்டினருக்கு எளிதாக இருந்தது என்றேன்.

தமிழர்களைப் போல இன்னொரு சமுதாயமா? அவர்களுக்கும் நம்மைப் போலவே புகழ் பெற்ற மரபா? வள்ளுவரின் வியப்பு மொழிகள் வெடித்து வந்தன.

ஆமாம். ஐயா! அவர்கள் போர் வெறியை சற்று புறம் போக்கத்தான் விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தனர். நம் தமிழ் மக்களின் போர் வேகமோ சண்டை, சாதல் என்று சாந்தமடைந்து போயிற்று.

கிரேக்கர்களின் போர் வேகம், அந்தப் போருக்கு இணையான இன்னொரு வேகமுள்ள விளையாட்டுகளுக்குப் பாதை காட்டிச் சென்றது என்றேன்.

எப்படி? எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்

என்றார்! அவரது ஆர்வத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு நானும் பேசத் தொடங்கினேன்.