பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஆடும் ஆடுகளமும்

போர் செய்வதுதான் வாழ்க்கை போரில் மடிவதுதான் வீரமரணம் என்று எண்ணிய கிரேக்க மக்கள், தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதுடன் நின்று விடாமல், பலப்பல உடற்பயிற்சிளையும் செய் தார்கள்.

அவ்வாறு தேகத்திற்குச் செய்த உடற்பயிற்சி களை, நாடே ஒன்று சேர்ந்து, ஒரு சீராக, ஒருமித்த நெஞ்சுடன் செய்தார்கள், நல்ல உடலே நல்ல மனத்தை நல்குகிறது, வளர்க்கிறது. வாழவைக் கிறது என்ற இலட்சியத்துடன் உடலை வலிமை பெறச் செய்தார்கள்.

அழகான உடலமைப்பை அனைவரும் பாராட் டினர். அழகான உடலைப் பெற, ஆண்கள் எல் லோருமே முயன்றனர். தங்கள் உடல் அழகை