பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 08. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அனைவருக்கும் காட்டுவதற்காக, சில சமயங்களில் உடலில் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக இருந் தும் தாங்கள் விருந்தினரை வீட்டில் வரவேற்றார் கள் என்றும் வரலாறு கூறுகிறது.

போரில் வெற்றிபெற்று வருகிற வீரனை கெளர விப்பதற்காகவும்; போரில் இறந்துபோன வீரனைப் புகழ்ந்து மகிமைப்படுத்துவதற்காகவும்; திருவிழாக் கள் நடக்கிற சமயங்களில் தெய்வங்களைப் புகழ்ந்து அவர்களின் அருளைப் பெறுவதற்காகவும், அவர் கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள்.

கிரேக்கர்கள் தொடங்கி வைத்த அந்தக் கீர்த்தி மிக்க விளையாட்டான ஒலிம்பிக் போட்டிகளின்

பிறப்பிற்காக, பல கதைகள் உள்ளன. of

சுற்றி வளைத்துச் சொல்கிற எல்லா புராணக் கதைகளுமே, இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டை யில் பெற்ற வெற்றியைக் கொண்டாடவும், நினைவுபடுத்திக் கொள்வதற்காகவுமே ஒலிம்பிக் பந்தயங்கள் உருவாக்கப்பட்டன என்றே கூறு

கின்றன.

போரிலே பெற்ற வெற்றியை ஆடிப்பாடி, கொண்டாடி, குதுாகலமாக விளையாடி மகிழ்ந்தார் கள் என்றால், நமது தமிழ்ச் சொல்லான ஆடும், ஆடலும் என்ற இரு சொற்களும் அந்தப் பொருளையே அழகுறக் குறிப்பதாக அமைந்திருக் கின்றன.