பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.I 3 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அதில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று பிரித்து, போர் வாழ்க்கைப் பண்புகளை, பெருமித மாகக் காட்டியிருக்கிறேன் என்றார் வள்ளுவர்.

நான் விவரித்த கிரேக்கர்கள், தங்கள் காலத்து வாழ்க்கை முறையை, விளையாட்டு முறையை, விவரமாகவே எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் நாட்டு வரலாறு அகிலத்தில் சிறப்பாக நிற்கிறது. தமிழர்கள் தாங்களாகவே ஆண்டு அனுபவித்து விட்டுப் போய்விட்டார்கள். குறிப்பு வைக்காத காரணத்தால்தான், தமிழர்தம் சிறப்பு எல்லாம் தரையில் புதைந்த சிற்பங்களாகப் போய்விட்டன என்றேன்.

உண்மைதான். தமிழர்களின் தன்னடக்கமே அதற்குக் காரணம். இப்படி எனக்குத் தெரிந்திருந் தால், என் வாழ்க்கைக் குறிப்பினைக் கூட நன்கு எழுதி வைத்துச் சென்றிருப்பேன். இப்படி எழுதி வைத்திருந்தால், என்னைப் பற்றி ஏராளமான கதைகள் ஏற்பட்டு இருக்காதே என்று பெருமூச்சு விட்டார்.

நீங்கள் உங்கள் காலத்துப் பண்புகளைக் காத்திருக்கின்றீர்கள். என்றாலும், உங்கள் குறளில், உங்களையறியாமலேயே, அதிகமான விளை யாட்டுக்கள் பற்றிய சிந்தனைகளைக் கொடுத்துச் சென்றிருக்கின்றீர்கள் அதுவே, எங்களுக்குப் போதும் என்றேன்.