பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் * I 3

விளையாட்டுக்கள் பற்றி நான் நிறைய சொல்லியிருக்கிறேனா! எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே என்றார் வள்ளுவர்.

உங்களுக்குப் புரியாமல் ஒன்றும் இல்லை. காலங்கள் அதிகமாகிவிட்டதால், கொஞ்சம் மறந் திருக்கின்றீர்கள். நான் சூழ்நிலைகளை சுட்டிக் காட்டுகிறபோது, உங்கள் நினைவுகள் தென்ற லாகத் திரும்பும் என்றேன்.

நிச்சயம் என் நினைவுகள் திரும்பும். என் குறள்கள் எல்லாம் எனக்கு மனப்பாடம் என்றார்.

ஆமாம் நீங்கள் ஒன்றே செய்தீர்கள். நன்றே செய்தீர்கள் என்றல்லவா உலகம் புகழ்கிறது. உங்கள் ஊனும் உயிரும் உயிர்த்தல்லவா இந்த தெய்வக் குறள்களை திருவாய் மலர்ந்தருளினிர்கள் என்றேன்.

உண்மைதான் உண்மைதான் என்றார்.

கிரேக்க மக்கள் போர் புரிவதற்காக, பயிற்சி களை மேற்கொண்டிருந்தார்கள். போர்க்கலன் களைக் கையாளும் பலம் பெருகுவதற்காக, பற்பல உத்திகளைக் கையாண்டார்கள்.

அவற்றின் அரிய பிறப்பாகத்தான் விளை பாட்டுக்களை உருவாக்கினார்கள். அந்த விளை பாட்டுக்களில் எல்லாம், போர்க்களத்தில் பயன்