பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i 8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வாளும், வேலும், வில்லும் மக்கள் வாழ்க்கை யில் இரண்டறக் கலந்திருந்தால்தான், என் குறளில் அவைகள் இடம் பெற்றுக் கொண்டன என்றார்.

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு (882)

மிக அருகாமையில் இருந்து பயன்படுத்தப் படுகிற ஆயுதம் வாள். அது வெளிப்படுகிற விதம், நிச்சயம் வேதனையே உண்டு பண்ணும். அப்படி வாள்போன்று வெளிப்படுகிற பகையைக் கண்டு அஞ்ச வேண்டாம். உட்பகையைக் கொண்டு உறவாக நெருங்கியிருக்கும் பகைக்கே அஞ்ச வேண்டும் என்பதே இதன் பொருள்.

வாளானது வீரர்களின் உற்ற துணை போல, என்றும் இருப்பது, மனிதருக்கும் பகை என்பதும் கூடவே தொடர்ந்து இருக்கும் ஒன்றாகும். ஆகவே, தான், வாள் (உறவு) போன்ற பகை என்று பாடிக் காட்டினேன் என்றார் வள்ளுவர்.

பெண்களின் கண்களை, வசப்படுத்துகிற ஆற்றல் உள்ளவை என்று வருணிப்பார்கள் புலவர் கள். அந்த ஒளியை வாள் ஒளிக்கு நான் ஒப்பிட்டுக் காட்டினேன்.

அதிகமாகப் பயன்படுகிற பொருட்கள், பாது காப்புடன் காப்பாற்றப்படுகிறபொழுது, பளபளப் பையும் சிலிர்ப்பையும் பெற்றிருக்கும்.