பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வில்லும், வேலும், வாளும் வாழ்வும்

சாலையிலே நாய்களின் பாய்ச்சல், கூச்சல், எங்கள் பேச்சை சற்று திசை மாற்றினாலும், மீண்டும் நாங்கள் தீஞ்சுவைத் தமிழர்தம் போராயு தங்கள் பற்றிய பேச்சைத் தொடர்ந்தோம்.

ஆமாம்! வள்ளுவர், தம் குறள் பற்றிய விளக் கத்தில் ஆழ்ந்தார்.

நான் எந்தப் பொருளை விளக்கமாகக் கூறத் தொடங்கினாலும், அதற்கு, சான்றுகள் கூறிச் செல்வது தான் என் வழக்கமாக இருந்தது. அத் தகைய சான்றுகளையும் அன்றாட வாழ்வில், அனுதினமும் மக்கள் கொண்டிருந்த பழக்க வழக் கங்களிடை இருந்து தான் எடுத்துக் கொண்டேன்.