பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 zz டாக்டர். எஸ். நவராஜ் செல்லையச

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல்ஏக்தல் இனிது. (772)

இந்தக்குறளில், வேலானது வேட்டைக்காரன் கையில் உள்ளது. வேட்டைக்குச் செல்கிறான் ஒரு வீரன். அவன் நோக்கம் ஒரு விலங்கை வேட்டை யாடுவது என்பது தான்.

அதற்காக சிறிய விலங்கைக் கொன்று சிலிர்த் தெழுவதைக் காட்டிலும், உயர்ந்த வலிமையான மிருகத்தை வேல் வீசி சாய்க்க முயன்று தோற்பது, சிறந்த வீரத்திற்கு அழகு என்று இந்தக் குறள் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

முயல்மீது அம்பை விசி, மாய்த்து மகிழ்வதை விட, யானைமேல் வேலை வீச முயன்று, தோற்பது விரனுக்குப் பெருமை.

முடியாத கடினமான காரியத்தில் ஈடுபடுவதே பெருமைக்குரிய வீரமாகும். ஆகவே, வேலைப் பயன்படுத்துகிற விரனின் துாய பண்பையும் கோடிட் டுக் காட்டினேன் என்றார் வள்ளுவர்,

இன்னும் ஒரு குறள். இந்தக் குறளில் வேல் மன்னவன் கையில் இருக்கிறது என்றார். வள்ளுவர்.

வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோலது கோடாது எனின் (546)