பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

--

கொடுமைபுரியும் கள்வன் இவர்களிடம் இருக்கிற வேல் பற்றிக் கூறினேன் என்று கூறிய அவர். இதனை படைச் செருக்கு அதிகாரத்தில் பாடிய காரணத்தையும் கூறினார்.

. படையில் வீரமும், வெற்றியும், புகழும் பெரு ‘மிதமும் தருவது வேலாயுதம்தான். அந்த வேலை வைத்தேதான், நான் படைச் செருக்கு என்று கூறினேன்.

அந்த வேல் வலிமைக்கு மேலே மனவலிமை கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஆதாரம். இதோ இந்தக் குறள்தான்.

வெறியோடு ஒரு பகைவன் வருகிறான். அவன் கையில் கொடிய வேல் இருக்கிறது. அவன் வீசி எறிய முற்படுகின்றான். இந்த செயல்களையெல் லாம் கண்டு கொதித்து, சினமுற்று, சீற்றமுடன் பார்க்கின்ற விழிகள், அவன் வேல் கண்டு கண்ணி மைத்துவிட்டால், அவன் வீரனல்ல. கோழை. வீர மரபிற்கே இழுக்கு என்று பாடினேன்.

விழித்தகண் வேல்கொண்டெறிய வழித்திமைப்பின் ஒட்டன்றே வன்க ணவர்க்கு (775)

தமிழர் தம் மக்கள், தனிச் சிறப்பு வாய்ந்த வீர

மக்கள். வேல் பாய வந்தாலும், விழியை இமைக்

காத வீரம் மிக்கவர்கள் என்று விம்மும் மார்பு ஏறி இறங்க பேசி மகிழ்ந்தார்.