பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கிரேக்கமும் தமிழகமும் வீரத்தால் ஒன்றுக் கொன்று இளைத்தவை அல்ல எனினும், வரலாறு எழுதிய காரணத்தால், அவர்கள் வாழ்க்கை உலகத் தில் உன்னதமானது என்று உலா வந்திருக்கிறது. அடக்கத்தால் வாழ்ந்து சென்ற தமிழர்களின் ஆற்றல்மிக்க வாழ்வு, சான்றில்லாமல் அமிழ்ந்து கிடக்கிறது என்றேன். -

கிரேக்க வரலாற்றினைப் பார்க்கும்போது, ஒவ் வொரு குடிமகனும் நாடுகாக்கும் போர் வீரனாகவே வாழ்ந்திருக்கிறான் என்றே அறிய முடிகிறது. அத் தகைய போர் வீரனே, வாழ்க்கையில் கலை இலக் கியரசனை மிகுந்தவனாக, விளையாட்டு வீரனாக வும் திகழ்ந்திருக்கிறான்.

உடலுக்குப் பயிற்சிகள், அறிவுக்கு இசையும் இலக்கணமும், போருக்கு வலிமை, நாட்டுக்குத் தியாகம் என்ற அமைப்பு கிரேக்கத்தில் இருந்தது.

அதுபோலவே தமிழகத்து வீர மக்களும் வீரர் களாக, விவேகிகளாக வாழ்ந்திருக்கின்றனர். அதனால்தான் சான்றோன் என்று தமிழக போர் வீரர்கள் அழைக்கப்பட்டனர்.

சான்றோன் என்றால் போர் வீரன் என்று தானே பொருள் என்று வள்ளுவர் கேட்டார்.

ஆமாம்! என்றேன்.