பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சான்றோரும் ஆடவரும்

சான்றோன் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் தருமாறு என்னைக் கேட்டு, சற்று நேரம் பொறுத்திருந்த வள்ளுவர்; முன்னரே சான்றோன் என்றால் தக்கார் என்று விளக்கம் தந்திருக்கிறேனே என்றார்.

ஆமாம். தக்கார் என்றால், சகல திறமை களையும் உடையவர் என்ற பொருளில் கூறினர்கள். மேலும் சான்றோன் என்ற சொல், வீரன் என்ற குறிப்பையும் உடையதாக விளங்குகிறது என்று விளக்க ஆரம்பித்தேன்.

சான்றோன் என்ற சொல்லுக்கு, நற்குடியில் பிறந்து, கல்வி கேள்விகளில் சிறந்து, நற்பண்புகள் நிறைந்தவர் என்று எல்லோரும் பொருள் கூறு கின்றார்கள். இது ஒரு இயல்பான விளக்கமே.