பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆனால், சான்றோன் என்னும் சொல். வீரன் என்று குறிக்க வந்த சொல்லாகவே, இலக்கியங்: களில் பல்வேறு இடங்களில் வருகின்றன.

பாசறைப் பல் சான்றிர் என் ம ஒரு வரி இருக் கிறது. பாசறையில் இருக்கின்ற வீரர்களே என்று அதற்கு விளக்கம் தருகின்றார்கள்.

சான்றோர் மெய்மறை என்பது, வீரனுக்குரிய உண்மை வழி என்றும், சான்றோனாக வீரனாக விளங்குகிற காளையான ஒரு இளைஞனுக்குரிய கடமை, களிறெறிந்து பெயர்தல் அதாவது.

யானையை வென்று மீளுதல் என்பதாகப் பொருள் தருகின்றன.

ஆண் மக்களை ஆடவர் என்று அழைக்கின்றார் கள். ஆடு+அவர் என்று பிரிகின்ற சொற்களுக்கு, வெற்றியாளர்கள் என்ற பொருள் கிடைக்கிறது.

ஆடு என்றால் வெற்றி என்பது ஒரு பொருள்

ஆண்மையுள்ள மக்களே ஆண் மக்கள். அவர்

U to - - - - o - - - -

களிலும் மேன்மையுள்ளவர்கள் வீரர்கள். அவர்கள் தான் ஆடவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

அந்த வீரத்திற்கும், ஆண்மைக்கும், வெற்றிக் கும் போராடுகிறவர்கள் எல்லோரும், இந்தப் பண் புகளுக்கு சான்றாகத் திகழ்வதால் தான், சான் றோர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று என். விளக்கத்தைக் கூறினேன்.