பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் - 11

குறள்களையும், ஆய்ந்து ஆய்ந்து, எழுதி எழுதி அனுபவித்துச் சென்றிருக்கின்றனர் பலர்.

ஆயிரமாயிரம் புதிய நூல்கள் அவரைவாழ்த்தி. யும் வணங்கியும், உரை எழுதியும் உணர எழுதி யும் பிறந்து, நிறைந்து போயிருக்கின்றன. இந்தப் பூவுலகில்.

அவரை சொந்தம் கொண்டாடி, சுற்றிச் சுற்றி வந்து சோர்ந்து போன கற்பனை வல்லுநர்கள் கூட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல,

அவரை சமணர் என்றனர். சிலர் சைவர் என்றனர். வைணவர் என்றனர். கிறித்தவர் என்றனர். அரசர் என்றனர், அறிவிக்கும் தொழி லாற்றும் வள்ளுவர் என்றனர்.

புலால் தொடாத புனிதர் என்றனர். நியாயம் உரைத்த நேரியர் என்றனர். தெரியாததை தெரிந் ததுபோல் உணர்விக்கும் தேவர் என்றனர்.

அவர் சொல்லாததே இந்த உலகில் எதுவு மில்லை என்று அனைவரும் சொல்லிச் சொல்லி, சுகம் கண்டு போய் விட்டனர். . .

இந்தக் கருத்துக்களைத் தான் போற்றிக் கொண்டும்'என் எண்ணங்கள் ஏற்றுக் கொண்டும், எதிர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன.