பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எவ்வளவோ அவர் சொன்னார்! எத் தனையோ சொன்னார்! சுருக்கமாகச்சொன்னார். கொஞ்சம் நறுக்கென்று கொட்டுவது போல நாசூக்காகவும் சொன்னார், என்ற கருத்துக்களைத் தான், என் கவியுள்ளம் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தது.

அரசர், மனிதர், அந்தணர், கயவர், தேவர் என்று மனிதர்களைப் பிரித்து, அவரவருக்கு வேண்டிய அரிய காரியங்களையும், அற்புத கடமைகளையும் தொகுத்துச் சொன்னவர் அவர். ஆயிரமாயிரம் தொழில் முறைகளையெல்லாம் அரசரும் அறிந்து இன்புறும் வண்ணம் அமைத்துத் தந்த அறிவாளர். வாழ்க்கையின் வளமான துணையாக விளங்கிய விளையாட்டுக்களைப்பற்றி. துலங்கிய விளையாட்டுக்களைப் பற்றி அவர் ஒன்றுமே சொல்லாது போனது ஏன் ?

இந்த வினாதான் என் ஆழ்மனத்திலிருந்து பொங்கியெழுந்து, அலைகள் கூட்டமாக ஆர்ப்பரித் துக் கொண்டிருந்தது.

பல ஆண்டுகள் உள் மனதில் பல்கிப்பெருகி, பரந்து விரிந்து, விடைகாணத் தெரியாமல் வெட்ட வெளியில் எழுந்து நிற்கும் பெரிய ஆலமரம்போன்று. எனக்குள்ளே நின்று கொண்டு இருந்தது அந்த நினைவு.