பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 () டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தொல்காப்பியர் எனக்கும் முந்திய காலத்தில் வாழ்ந்த நல்காப்பியர் அல்லவா!

அவர் காலம், போர் வாழ்வே சீர் வாழ்வு, என்று அமைந்திருந்தது போலும். அதுவே என் காலத்திலும் தொடர்ந்தது. அதனால்தான், என் பாடல்கள் எல்லாவற்றிலும் போர்த்திறம் பற்றிப் பாடுகிற சூழ்நிலை மிகுதியாக இருந்து விட்டது.

நீங்கள் கூறிய சான்றோன் எனும் சொல்லை, நானும் பல இடங்களில் பாடியிருக்கின்றேன் என்றார். o

அவற்றில் வரும் கருத்துக்கள் எல்லாம் வீரம். அந்த வீரத்தில் பிறக்கும் பண்புகள், அன்பு மற்றும் அழகு போன்றவையை வெளிப்படுத்தும் தன்மை யிலே குறள்கள் அமைந்திருப்பதை, நீங்கள் உணரப் போகின்றீர்கள் என்று தன் குறள்களைக் கூறத் தொடங்கினார். -

நானும் பரபரப்படைந்தேன் குறள்களைக் கேட்க, தான் பெற்றெடுத்த காலத்தில் பெற்ற மகிழ்ச்சியை விட, ஒரு தாயானவள், தன் மகன், மக்கள் போற்றும் வீரனாக விளங்குகிறான் எனக் கேட்கும் போது, அந்தத் தாய் பெருமகிழ்வு பெறுகிறாள். களிப்பின் உச்சிக்கே போகிறாள்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் (69) o