பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் I 31

அப்படி மகிழ்ச்சிப் பெருக்கில், திளைத்து மகிழ்கின்ற தாய் ஒருத்தி, பசியால் வருந்தி வாடுகிற போதும், ஒரு வீர மகன் மற்ற வீரர்கள் பழித்துப் பேசுகின்ற இழிவான காரியங்களைச் செய்யமாட்டான்.

ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (656)

அதுமட்டுமல்ல. வீரர்களாகிய சான்றோர்கள், தாய்க்கு முன்னால் மட்டுமல்ல, மற்றும் வீரர்கள் விவேகிகளாக விளங்குகிற சான்றோர்கள் முன்பு, மதியை மயக்குகின்ற கள் போன்ற போதைப் பொருட்களையும் உண்ணமாட்டார்கள்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதா லென்மற்றுச் சான்றோர் மூகத்துக் களி (923)

உண்ணற்க கள்ளை, உணில் உண்க சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர் (925)

இப்படி வள்ளுவர் கூறிக் கொண்டு வருகிற போது, நானும் வழிமறித்தேன்.

கள் போன்ற போதைப் பொருளைக் குடிக்கக் கூடாது என்று உங்கள் காலத்தில் இருந்த கட்டுப் பாடு, எங்கள் காலத்திலும் இருக்கிறது.

வீரர்கள் என்றால் உடலில் வேகம் வரு வதற்குப் போதைப் பொருட்களை உட்கொள்கிற