பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் ! J &

  • --

பிறர்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனன்றோ ஆன்ற ஒழுக்கு. (148)

அது மட்டுமல்ல. நல்ல வீரர்களுக்கு நல்ல பண்புகள் உண்டு. அதில் ஒன்று நட்பு பாராட்டுதல்; நட்புக்கு இனிமையாக நடந்து கொள்ளுதல். இதற்கு உயர்ந்த மனப்பண்பாற்றல் வேண்டும்.

கட்பிற்கு உறுப்பு கெழுதகைமை, மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். (802)

தட்டார் என்றால் நண்பர். உப்பாதல் என்றால் இனிமையாகுல்.

இனிமைப் பண்புகளுடன், குண நலம் கொண்டவராகவும் சான்றோர்கள் விளங்கு கின்றார்கள். அதுவே அவர்களுக்கு இயல்பாகவும், அதிகமாகவும் உள்ள நலமாக விளங்குகிறது.

குணநலம் சான்றோர் நலமே, பிறகலம் எங்கலத்து உள்ளது.ாம் அன்று (982)

குணநலம் குன்றியவர்கள், குறைந்தவர்கள், குணக்கேடர்கள் யாரும், மற்ற எல்லா வளங்களும், நலங்களும் பெற்றிருந்தாலும் கூட, அவர்களை சான்றோர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நடையழகும் உடை அழகும், எல்லாமே அவர்களுக்கு ஏற்பட்ட நோய் போலத் தோன்றுமே தவிர,

மேன்மையாக விளங்காது.