பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4 o டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அணியன்றோ கானுடமை, சான்றோர்க்கு, அஃதின்றேல் கிணியன்றோ பீடு கடை. (1041)

நன்மை தீமை, பாவம் புண்ணியம், உண்மை பொய், அறம், மறம், போன்றவற்றை ஆராய்ந்து, நல்லது செய்து, அல்லது அகற்றி, நேரிய வழியில் நிற்கின்ற பண்பை, சான்றோர்கள் மேற்கொண்டு விளக்குவார்கள்.

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. (118)

சாதாரண மக்கள் வீரனாகும் போது, ஆடவர் என்று பெயர் பெறுகின்றார்கள். வீரமும், விவேகமும், ஆற்றலும் ஆண்மையும் பெருகிக் கொள்கிற போது, அவர்களுக்கு அனுபவ அறிவும், செயலறிவும் மிகுந்து, சான்றோர்கள் என்ற பெயரையும் புகழையும் பெற்றுக் கொள் கின்றர்கள்.

உடல் உரம் உள்ள வீரர்களுக்குத் தான், பெருந்தன்மைப் பண்புகள் பெருகும். உடல் உரம் இழந்தவர்கள், மக்கள் என்ற தகுதியையே இழந்து விடுகின்றார்கள்.

இந்த எண்ண. எழுச்சியில்தான், நான் சான்றோர் என்ற சொல்லை பல இடங்களில் (12 இடங்களுக்கு மேலாக) பயன்படுத்தியிருக் கிறேன்.