பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 13 fi :

நான் விரத்தைப் பற்றி, வீரப்பண்பைப்பற்றிப் பாட, நான் மேற்கொண்டிருந்த தொழிலும், நான் போர்களத்தில் பெற்ற அனுபவங்களுமே மிகுதியாக உதவின என்றார் வள்ளுவர்.

விளையாட்டுக்களும், போர்களச் செயல் முறைகளிலிருந்து தான் பிறந்திருக்கின்றன என்ற ஒரு கருத்து விளங்கி வருகிறது என்றேன்.

பிறகென்ன? உங்கள் விளையாட்டும் எங்கள் காலத்து போர்ச் செயல்களும் ஒன்று தானே! உங்கள் வினாக்களுக்கு என்விடையாக, என் னுடைய குறள்கள் இருக்கின்றன என்றார்,

நானும் சரியென்றேன். அதற்குள் பலர் ஒடிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது!

ஆச்சரியமாக அது என்ன என்றார்?