பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ol 50 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

புதிய சிந்தனை, புதுமையாகப் பிறந்தது என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆழமாக எண்ண எண்ண, அதற்குள்ளே சீராகச் சுரக்கும், தேனாப் பிறக்கும் உணர்வுகளை, என்னால் எழுதிக் காட்ட முடியவில்லை. அதற்கு வள்ளுவர் பாடிய குறள்தான், என் மன ஆற்றா மையைமாற்றி அமைத்தது. அமைதியை அளித்தது.

தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தாறும் அறிவு. (396)

மணற்பாங்கில் நீர் வேண்டுவோர், மணலைத் தோண்டுகிறார். அவர் எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறாரோ, அதற்கேற்ற அளவே நீர் கிடைக்கும்.

மணற்கேணியின் ஆழம் போலவே, தோண்டு வோரின் முயற்சிக்கு ஏற்பவே, நீரின் பெருக்கு நிறையும்.

அதுபோலவே, வள்ளுவரின் குறளாகிய மணற் கேணியில், முயற்சியுடன் தோண்டியவர்கள், ஊறிய நீரை உள்ளம் உருகி, உவப்பில் பருகி, உயர்ந்த நூல்களைப் படைத்துப் போயினர்.

நானும் அத்தகைய ஆசையில் தான், என் துறைப்பக்கம் வள்ளுவரை இழுத்தேன்.