பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் I 5)

தெய்வ பக்தி நிறைந்தவர்களின் இழுப்புக்கு தெய்வம் இளகி, இறங்கி வருவதாகக் கூறுவார் களே, அது போல, திருவள்ளுவரும், தேக உரு வின்றி, தெய்வ ஒளியாக வந்து, எனக்கு சிந்தையில் கருத்துப் பெருக்கத்தைத் திறந்து விட்டார்

அந்தத் தெய்வச் சுரப்பின் திறந்த மடைதான் , இந்த நூலாகப் பிறந்து வெளி வந்திருக்கிறது.

வள்ளுவர் தந்தக் குறள் எல்லாம், ஞானப் பழங்கள். * .

ஞானம் என்பது முற்றிய அறிவின் முதிர்ச்சி யாலும் வரும். கருவிலே திருவுடையாராகின்ற

பேற்றாலும் வரும்.

வள்ளுவரின் ஞானம், இந்த இரண்டின் இணைப்பாகவே இருக்க வேண்டும். இல்லையென் றால், இந்த இரண்டாயிரத்து அறுநூற்று அறுபது வரிகளில், இரண்டாயிரம் ஆண்டு காலமாக, எத் தனையோ கோடி மக்களின் சிந்தனைச் சாம்ராஜ் யத்தினை ஆண்டு கொண்டிருக்க முடியாதே!

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் என் பதுதான், இந்த நூல் தரும் கருத்துக்கள்.

- வள்ளுவர் வாழ்க்கை வீர வாழ்க்கையாக, போர்க்களங்களில் வெற்றியை விளைத்து மகிழ்ந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது என்று நான்